2 ஆண்டுகளாக மூடிய அறையில் நெல் மூட்டைகள் : 10,000 கிலோ நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் 10 ஆயிரம் கிலோ நெல் மூட்டைகள், விசாரணை என்ற பெயரில் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
2 ஆண்டுகளாக மூடிய அறையில் நெல் மூட்டைகள் :  10,000 கிலோ நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்
x
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள பந்த நல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் நெல் சேமித்து வைப்பதற்காக தனி அறை உள்ளது. இங்கு, பூஜைக்காக 10 ஆயிரம் கிலோ நெல் அனுப்புவதோடு, மீதமுள்ள நெல் மூட்டைகள் அரசு கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், கோவிலில் 6 சிலைகள் மாயமானதால், நெல் அறைக்குள் மறைத்து வைத்திருக்கலாம் என கருதி, கடந்த 2 ஆண்டுகளாக இந்த அறையை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் 'சீல்' வைத்துள்ளனர். எனவே, நெல் மூட்டைகளுக்குள் சிலைகள் இருக்கிறதா என்பதை சோதனை செய்து, நெல் வீணாகாமல் காக்க வேண்டும் என விவசாயிகளும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்