சென்னையில் சுமார் 1,600 சிலைகள் கரைப்பு

தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் வழிபட்டு வருகின்றனர்.
சென்னையில் சுமார் 1,600 சிலைகள் கரைப்பு
x
தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் வழிபட்டு வருகின்றனர். சென்னையில் மட்டும் 2 ஆயிரத்து 642 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை எண்ணூர்,  பாலவாக்கம்,  பட்டினப்பாக்கம், திருவெற்றியூர், காசிமேடு கடல் பகுதிகளில்  கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பட்டினப்பாக்கத்தில் மட்டும் ஆயிரத்து 600 விநாயகர் சிலைகள் இன்று கரைக்கப்பட்டன. மேலும், அசம்பாவித சம்பவங்கள் தடுக்கும் விதமாக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெரிய விநாயகர் சிலைகள் கிரேன் மூலம் கடலில் கரைக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்