பரமக்குடியில் நுண் உர செயலாக்க மையத்தை திறக்க எதிர்ப்பு

பரமக்குடியில் நுண் உர செயலாக்க மையத்தை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏவை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பரமக்குடியில் நுண் உர செயலாக்க மையத்தை திறக்க எதிர்ப்பு
x
பரமக்குடியில் நுண் உர செயலாக்க மையத்தை திறக்க எதிர்ப்பு தெரிவித்து  அதிமுக எம்எல்ஏவை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட சந்தை திடல் வளாகத்தில் 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நுண் உர செயலாக்க மையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு வந்திருந்த பரமக்குடி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரை, பொதுமக்கள் திடீரென்று முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பாதிப்பு இல்லை என அதிகாரிகள் உறுதி அளித்ததால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்