மதமாற்றம் பற்றிய முழுமையான தகவல் தெரிவிக்காதது ஏன்? - சான்றிதழை பெற உரிமையில்லை என நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஆகஸ்ட் 31, 2019, 11:59 PM
இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர், எந்த பிரிவிற்கு மாறினார் எனத் தெரிவிக்காததால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழைப் பெற உரிமையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ரில்வான் என்பவர், ராம்ஜியா என்ற ஆதிதிராவிடர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹர்ஷத், ஹர்ஷிதா என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த, 2012 அக்டோபர் மாதம், இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இதையடுத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி ரில்வான் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அதனை நிராகரித்து செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டு இருந்தார். இதனை ரத்து செய்யக்கோரி ரில்வான்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு   நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இஸ்லாம் மதத்தில் எந்த பிரிவிற்கு மாறினார் என்பதை மனுதாரர் தெரிவிக்காததால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழைப் பெற அவருக்கு உரிமையில்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.