சாதி, வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.14,000 லஞ்சம் கேட்ட வட்டாட்சியர்...

சிதம்பரம் அருகே லஞ்சம் வாங்கியதாக வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், இடைத்தரகர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாதி, வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.14,000 லஞ்சம் கேட்ட வட்டாட்சியர்...
x
சிதம்பரம் அருகே லஞ்சம் வாங்கியதாக வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், இடைத்தரகர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கம்ரூனீசா என்ற பெண்ணிடம் வாரிசு மற்றும் சாதி சான்றிதழ் வழங்க, 14 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக 3 பேரும் கேட்டுள்ளனர். இது குறித்த புகாரின் அடிப்படையில், கடலூர் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. மெல்வின் ராஜாசிங் தலைமையில் வந்த போலீசார்  லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கண்ணன், துணை வட்டாட்சியர் அருள்பிரகாசம் உள்ளிட்ட 3 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்