மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் முறைகேடாக பட்டங்கள் : பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த வாணி என்பவர், தமக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் முறைகேடாக பட்டங்கள் : பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த வாணி என்பவர், தமக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, முதல் இரண்டு ஆண்டுகள் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி வேதியியலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பிஏ வரலாறு என்று இன்னொரு படிப்பை ஒருவரால் எப்படி படிக்க முடியும் என்று கேள்வி எழுப்பி, மனுவை தள்ளுபடி செய்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இவ்வாறு முறைகேடாக பட்டங்கள் வழங்கியவர்கள் மீது பல்கலைக்கழக மானியக்குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்