கன்னியாகுமரியில் சாட்சி சொன்னவரை கூலிப்படை மூலம் கடத்த முயற்சி

கன்னியாகுமரியில், கொலை வழக்கில் சாட்சி சொன்ன நபரை கூலிப்படையை கொண்டு கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியில் சாட்சி சொன்னவரை கூலிப்படை மூலம் கடத்த முயற்சி
x
கன்னியாகுமரி மாவட்டம் , துண்டத்தாறவிளை பகுதியை சேர்ந்த சாந்தகுமாரை கூலிப்படையினர் கடத்தி சென்று அவரது மனைவி ராதாவிடம் இரண்டு லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். பதட்டம் அடைந்த அவரது மனைவி மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், இதனையடுத்து கடத்தல்காரர்கள் கூறியபடி ராதா,  அலுவினை பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு பதுங்கியிருந்த போலீசார்  கூலிப்படையினரை கைது செய்து சாந்தகுமாரை காப்பாற்றினர். தொடர்ந்து விசாரணையில் கடந்த 2010 ஆம் ஆண்டு சாந்தகுமாரின் உறவினர் ஷெர்மினை ஒரு தலையாக காதலித்த ஷாஜின் என்பவன் வெட்டி கொலை செய்த வழக்கில் சாட்சி சொன்ன சாந்தகுமாரை பழிவாங்க கேரளாவை சேர்ந்த கூலிப்படையினரை  ஏவி கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. சினிமா காட்சிகளை மிஞ்சிய இந்த கடத்தல் வழக்கு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்