டாக்டர். சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற செயற்குழு கூட்டம்
பதிவு : ஆகஸ்ட் 11, 2019, 01:50 AM
டாக்டர். சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற செயற்குழு கூட்டம் - நற்பணி மன்ற புரவலர் ஆதவன் ஆதித்தனுக்கு பாராட்டு..
நற்பணி மன்ற தலைவர் சபேஷ் ஆதித்தன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டுவது, குளம் குட்டைகளை சுத்தம் 
செய்வது போன்ற தன்னார்வ சேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் புரவலர் பொறுப்பை ஏற்றுகொண்டுள்ள ஆதவன் ஆதித்தனுக்கு 
வரவேற்பும் பாராட்டும் கூட்டத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனரும், தமிழக முன்னாள் சபாநாயகருமான சிபாஆதித்தனாரின் பிறந்த நாளை அரசு விழாவாக அங்கீகரித்துள்ள தமிழக 
முதலமைச்சருக்கும், அவரது பெயரில் விருது அறிவித்துள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கும் இந்த கூட்டத்தின் வாயிலாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.