தமிழகத்திற்கு அடுத்த 4 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு
பதிவு : ஆகஸ்ட் 09, 2019, 12:58 AM
காவிரியில் தற்போது திறக்கும் தண்ணீரை 4 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டு உள்ளது.
காவிரியில் தற்போது திறக்கும் தண்ணீரை 4 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டு உள்ளது.
இக்குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமையில் புதுடெல்லியில் , கூட்டம் நடைபெற்றது. பல மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில்  இந்த முடிவு எடுக்கப்பட்டது. முடிவில்,  செய்தியாளர்களிடம் பேசிய  நவீன் குமார், கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதிக்கு பிறகு காவிரி, கபினி பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பெய்திருந்தாலும் , மொத்த மழையின் அளவு பற்றாக்குறையாக உள்ளது என்று தெரிவித்தார். இதனிடையே, காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் அடுத்த கூட்டம் வருகிற 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.