சென்னையில் மேற்கு வங்க பெண் அடித்துக் கொலை

சென்னையில் மேற்கு வங்க மாநில பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் மேற்கு வங்க பெண் அடித்துக் கொலை
x
சென்னையில் மேற்கு வங்க மாநில பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் பிங்கி. 30 வயதான இவர், முதல் கணவரை பிரிந்து சென்னை அண்ணா நகரில் கிருஷ்ணபகதூர் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். கடந்த 6 மாதங்களாக இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில், டாட்டூ போடுதல் மற்றும் சேலை விற்பனை  செய்து வந்தார். இந்த நிலையில் பிங்கி தன் வீட்டு குளியலறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.பிங்கியின் வீட்டின் அருகே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து 2வது கணவர் கிருஷ்ணபகதூர் உட்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்