தர்மபுரி அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர் பலி

தர்மபுரி அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர் பலி
x
பென்னாகரத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர் அங்கு மருந்துக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி லதா அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் திருமூர்த்தி தனது குடும்பத்தினருடன் தருமபுரி அருகே உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டு காரில் ஊர்  திரும்பிக்கொண்டிருந்தார். மல்லாபுரம் அருகே கார் சென்ற போது, எதிரே ஒகேனக்கல்லில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்த காருடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் திருமூர்த்தி, அவரது மனைவி லதா மற்றும் மகன், மகள் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 4 பேர் சிகிக்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொண்டிருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்