பிரசவத்தின்போது சோகம் - தாய் சேய் உயிரிழப்பு

பாப்பாரப்பட்டியை அடுத்த ஆலமரத்து கொட்டாய் கிராமத்தை சேர்ந்த ஜோதி பிரசவத்திற்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரசவத்தின்போது சோகம் - தாய் சேய் உயிரிழப்பு
x
பாப்பாரப்பட்டியை அடுத்த ஆலமரத்து கொட்டாய் கிராமத்தை சேர்ந்த ஜோதி, பிரசவத்திற்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் ஜோதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்த நிலையில், ஜோதிக்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஜோதியும் சில மணி நேரங்களில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மருத்துவர்களின் அலட்சியத்தாலேயே தாயும் சேயும் உயிரிழந்தாக ஜோதியின் கணவர் காந்தி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்