சென்னை தனியார் கருத்தரிப்பு மையத்தில் சோதனை

சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தில் 2018 ஜூலை 18 ஆம் தேதி விழுப்புரத்தைச் சேர்ந்த சரசு என்ற பெண் கருத்தரிப்பு சிகிச்சைக்காக வந்துள்ளார்.
சென்னை தனியார் கருத்தரிப்பு மையத்தில் சோதனை
x
சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தில்,  2018 ஜூலை 18 ஆம் தேதி, விழுப்புரத்தைச் சேர்ந்த சரசு என்ற பெண் கருத்தரிப்பு சிகிச்சைக்காக வந்துள்ளார்.தொடர் சிகிச்சை பெற்று வந்த சரசு, சிகிச்சைக்கு இடையில் உயிரிழந்துள்ளார். கருத்தரிப்பு மையம் தவறான சிகிச்சை அளித்ததால்தான் தனது தங்கை உயிரிழந்ததாக சரசுவின் அண்ணன் அப்போதே போலீசில் புகார் அளித்திருந்தார். நீதிமன்றத்திலும் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் தற்போது அந்த வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தின் அனுமதியுடன், அந்த தனியார் கருத்தரிப்பு மையத்தில் எழும்பூர் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்