பழனி சண்முகாநதியில் ஆடிபெருக்கு விழா - நதியை தூய்மையாக வைத்துக்கொள்வதாக உறுதி மொழி

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகா நதியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று மாலை சண்முகா நதிக்கு தீப ஆராதனை காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனி சண்முகாநதியில் ஆடிபெருக்கு விழா - நதியை தூய்மையாக வைத்துக்கொள்வதாக உறுதி மொழி
x
திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகா நதியில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, நேற்று மாலை சண்முகா நதிக்கு தீப ஆராதனை காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.  பழநி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மேகாலய முன்னாள் ஆளுநர் சண்முகநாதன், ஜீயர்கள், மடாதிபதிகள், சாதுக்கள், ஆன்மீக பெரியோர் உட்பட ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். நதியை அசுத்தம் செய்யமாட்டோம், தூய்மையாக வைத்துக் கொள்வோம், பிளாஸ்டிக் பைகளை வீசமாட்டோம் என்று நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்  உறுதி மொழி எடுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்