ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட தந்தை, மகன் - பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

ஈரோடு மாவட்டம், பழையபாளையம் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி, மகன் கிருஷ்ணனுடன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பட்லூர் ஆற்றில் குளிக்கச் சென்றார்.
ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட தந்தை, மகன் - பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்
x
ஈரோடு மாவட்டம், பழையபாளையம் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி, மகன் கிருஷ்ணனுடன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பட்லூர் ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரின் வேகம் அதிகரித்ததால், கிருஷ்ணன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதையடுத்து அவரை காப்பாற்றுவதற்காக முயற்சித்த திருமூர்த்தியும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், கடும் போராட்டத்திற்கு பிறகு, சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் இருவரையும் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து இருவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்