"100 நாள் வேலை திட்ட பணியாளர் மூலம் தூய்மைப்பணி" - பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் உத்தரவு

100 நாள் வேலை திட்ட ஊழியர்களைக் கொண்டு, அரசு பள்ளி வளாகங்களில் துாய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
100 நாள் வேலை திட்ட பணியாளர் மூலம் தூய்மைப்பணி - பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் உத்தரவு
x
தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்  கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு  பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட இதர காய்ச்சல்கள் குறித்து, இறை வணக்க கூட்டத்தில், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். பள்ளிகளில் தண்ணீர் தேங்காமல் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்