"நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" - மாணவி உருக்கமான கடிதம்

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனம் உடைந்த நிலையில் இருந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - மாணவி உருக்கமான கடிதம்
x
நெல்லை அருகே ஊருடையான்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் தனலட்சுமி. மருத்துவர் ஆக வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருந்த இவர், நீட் தேர்வில் 90 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தால், பயிற்சி மையத்தில் சேர முயற்சித்துள்ளார். ஆனால், போதுமான பணம் இல்லாததால் விரக்தி அடைந்த தனலட்சுமி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக தனலட்சுமி எழுதிய கடிதத்தில், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் ஆசைப்பட்டதை அடைய முடியாமல் போய் விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், தாம் பிறந்ததே வீண் என கடிதத்தில் குறிப்பிட்டு நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்றும் தனலட்சுமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தனலட்சுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். 


Next Story

மேலும் செய்திகள்