தேசிய புலனாய்வு முகமைச் சட்டத் திருத்தம் கண்டனத்துக்குரியது - வைகோ கண்டனம்

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட தேசிய புலனாய்வு முகமைச் சட்டத் திருத்தம் கண்டனத்துக்குரியது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தேசிய புலனாய்வு முகமைச் சட்டத் திருத்தம் கண்டனத்துக்குரியது - வைகோ கண்டனம்
x
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட தேசிய புலனாய்வு முகமைச் சட்டத் திருத்தம் கண்டனத்துக்குரியது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சிறுபான்மையினத்தவர், அரசின் கொள்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரை கடுமையாக ஒடுக்க, இந்த சட்டத் திருத்தம் மத்திய அரசுக்கு அபரிமிதமான அதிகாரத்தை அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு ஊறு விளைவிக்கும் என்.ஐ.ஏ. சட்டத் திருத்தம், மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்தம் ஆகியவற்றை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்