சிலை கடத்தல் வழக்குகளில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு - பொன்.மாணிக்கவேல்

சிலை கடத்தல் வழக்குகளில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பிருப்பதாக பொன்.மாணிக்கவேல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
x
பழவலூர் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காகவும், பழிவாங்கும் நோக்கிலும் தனக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் பொய்வழக்கு பதிவு செய்தததாக, சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பொன். மாணிக்கவேலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் அவர் கோரியிருந்தார். இந்த மனு  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி பொன்.மாணிக்கவேல் மற்றும் சமூக சேவகர் யானை ராஜேந்திரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.பொன். மாணிக்கவேலின் இணைப்பு மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதி, சமூக சேவகர் யானை ராஜேந்திரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சிலை கடத்தல் சம்பவங்களில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற்றதாகவும்,  பொன். மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து ஆதாரங்களுடன் பதில்மனு தாக்கல் செய்ய பொன் மாணிக்கவேல் தரப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதி,  விசாரணையை வரும் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.



Next Story

மேலும் செய்திகள்