(18.07.2019) : தமிழக சட்டப்பேரவையில் இன்று
பதிவு : ஜூலை 18, 2019, 08:31 PM
தென்காசி மற்றும் செங்கற்பட்டு ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்டு இரு புதிய மாவட்டங்கள் உதயமாகும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தென்காசி மற்றும் செங்கற்பட்டு ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்டு, இரு புதிய மாவட்டங்கள் உதயமாகும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில், விதி 110 - ன் கீழ், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.தமிழகத்தில் அண்மையில் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உதயமாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே, தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

விரைவில், கும்பகோணம் தனி மாவட்டம் - வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தகவல்

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு, விரைவில் தனி மாவட்டம் உதயமாகும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், இதனை வெளியிட்ட ஆர்.பி. உதயகுமார், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

நல்லகண்ணுவுக்கு அரசு வீடு ஒதுக்கீடு - துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தகவல்

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்ல கண்ணுவுக்கு அரசு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், இதனை வெளியிட்ட ஓ. பன்னீர் செல்வம், இதேபோல, முன்னாள் அமைச்சர் கக்கன் குடும்பத்திற்கும் வாடகை இல்லாமல் அரசு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

உயருகிறது, ஆம்னி பேருந்து கட்டணம்

படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தனி வரி விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இதன்படி, படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயரும் அபாயம் உருவாகி உள்ளது.

தனியார் சட்டக்கல்லூரி  : அரசு விளக்கம் 

அரசு சட்டக்கல்லூரிகள் இல்லாத இடங்களில் தனியார் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது, அமைச்சர் சி.வி. சண்முகம், இந்த தகவலை வெளியிட்டார்.விழுப்புரத்தில் புதிய சட்டக்கல்லூரியை பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பார் என்று சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

மனித கழிவு அகற்றம் : வேலுமணி எச்சரிக்கை 

மனித கழிவுகளை அகற்றும் பணியில் , மனிதர்களை அரசு ஈடுபடுத்துவது கிடையாது என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திட்டவட்டமாக தெரிவித்தார். சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பிச்சாண்டி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் குறுக்கிட்ட எஸ்.பி. வேலுமணி, மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை தனியார் ஈடுபடுத்தினால், சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்தார்.

கலைஞர் செம்மொழி தமிழ் விருது  : அரசு விளக்கம்

கலைஞர் செம்மொழி தமிழ் விருது, இன்னும் 3 மாதத்தில் வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், செய்தித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் தாயகம் கவி பேசிக்கொண்டிருந்தபோது, குறுக்கிட்ட மாஃ பா பாண்டியராஜன், இந்த தகவலை வெளியிட்டார். கலைஞர்செம்மொழி தமிழ் விருது பெறுவதற்கான தகுதியானவர்களின்விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் விளக்கம் அளித்தார்.


தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

10238 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1845 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5242 views

பிற செய்திகள்

ஜெயிலா? பெயிலா? என்பது நீதிமன்றத்தின் கையில் - சிதம்பரம் கைது குறித்து இல.கணேசன் கருத்து

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதாகும் போது மட்டும் பேசுபவர்கள், 26 முறை ஜாமீன் வழங்கும்போது பேசாமல் இருந்த‌து ஏன் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

10 views

அன்னிய செலாவணி மோசடி வழக்கு - உயர்நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல்

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தம்மிடம் கேட்கப்பட்ட தொடர்பில்லாத கேள்விகளை ரத்து செய்ய வேண்டும் என, சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

276 views

"காங். ஆட்சியில் ராஜீவ் காந்தி மக்களை அச்சுறுத்தவில்லை" - பிரதமர் மோடி மீது சோனியாகாந்தி மறைமுக தாக்கு

இந்தியாவில் பிரிவினைவாதத்தை தூண்டும் சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட வேண்டும் என்று சோனியாகாந்தி அழைப்பு விடுத்தார்.

18 views

"தம் மீது பொய்யான வழக்கு என சிதம்பரம் மறுக்காதது ஏன்?" - தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி

தம் மீது போடப்பட்டது பொய்யான வழக்கு என சிதம்பரம் மறுக்காதது ஏன் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

31 views

ப.சிதம்பரம் கைது - காங்கிரஸ் போராட்டம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

18 views

ப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி

ஐ. என். எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை வரும் 26 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க, சிபிஐக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

54 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.