ரேசன் கடையில் அனைத்து பொருட்களும் வழங்கப்படுகிறது - செல்லூர் ராஜூ

கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ரேசன் கடையில் அனைத்து பொருட்களும் வழங்கப்படுகிறது - செல்லூர் ராஜூ
x
கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று  அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல் மில் காலணியில், அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி திறப்பு விழா மற்றும் வானரமுட்டி யில் மத்திய கூட்டுறவு வங்கி கிளை , அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி திறப்பு விழா நடைபெற்றது.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட விவசாயக் கடன்களுக்கு ஆயிரத்து 257 கோடி ரூபாய் வட்டி மானியமாக தமிழக அரசு கொடுத்துள்ளது என்றார். தற்போது 42 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நியாய விலை கடைகளில் அனைத்துப் பொருட்களும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், அப்படி வழங்கவில்லை என்று புகார் எழுந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்