"ரூ.75 ஆயிரம் கோடியில், 15 லட்சம் வீடுகள்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

75 ஆயிரம் கோடி ரூபாயில் 15 லட்சம் ஏழை மக்களுக்கு குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ரூ.75 ஆயிரம் கோடியில், 15 லட்சம் வீடுகள் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
x
75 ஆயிரம் கோடி ரூபாயில் 15 லட்சம் ஏழை மக்களுக்கு குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். சட்டப்பேரவையில், கேள்வி நேரம் முடிந்ததும், திமுக உறுப்பினர் சேகர்பாபு, சென்னையில் சாலைகளின் ஓரம் வசிக்ககூடிய மக்களுக்கு, வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், சென்னையி,ல், சாலை ஓரங்களில் வசிக்கும் மக்கள் வீடுகளின்றி தவித்து வருவதாக தெரிவித்தார். அதற்கு பதில் அளித்து பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தமிழகத்தில் குடிசைகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, அதன்படி 15 லட்சம் மக்களுக்கு, 75 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது வரை 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஒ.பன்னீர்செல்வம், தமிழகத்தை குடிசைகளற்ற மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்