அனைத்துக் கட்சி கூட்டம் : திமுக குற்றச்சாட்டு - அதிமுக பதில்

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவிற்கு வேண்டப்பட்ட கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.
அனைத்துக் கட்சி கூட்டம்  : திமுக குற்றச்சாட்டு - அதிமுக பதில்
x
பேரவையில் கேள்வி நேரம் முடிந்தபின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். பேரவையில் உறுப்பினர்களாக இருந்தவர்களின் கட்சிகளுக்கு அழைப்பு விடு்க்காதது ஏன் கேள்வி எழுப்பிய துரைமுருகன், அதிமுகவிற்கு வேண்டப்பட்ட கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். அதற்கு பதில் அளித்து பேசிய துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், முன்னேறிய வகுப்பினருக்கான, 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து, திராவிடர் கழக தலைவர் வீரமணி, பல்வேறு அரிய கருத்துக்களை கூறியதாக தெரிவித்தார்.

அது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்தபிறகு அரசு உரிய முடிவை எடுக்கும் என்றும் கூறினார். அப்போது மீண்டும் குறுக்கிட்ட துரைமுருகன், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என கூறிவிட்டு, உங்களுக்கு வேண்டப்பட்ட கட்சிகளை மட்டும் அழைத்தது சரியா'' என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் குறுக்கிட்டு, இந்திய ஜனநாயக கட்சி, மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பன்னீர் செல்வம், கட்சிகளை அழைப்பதில் பாரபட்சம் காட்டவில்லை எனவும், இந்த குறை இனி நடக்காது எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்