காணாமல் போன மீனவரை மீட்க கோரிக்கை - போராட்டம் நடத்த உள்ள மீனவர்கள்

நெல்லை, கூத்தங்குழி கடலில் காணாமல் போன மீனவரை மீட்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த இருப்பதால், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போன மீனவரை மீட்க கோரிக்கை - போராட்டம் நடத்த உள்ள மீனவர்கள்
x
நெல்லை, கூத்தங்குழி கடலில் காணாமல் போன மீனவரை மீட்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மீனவர்கள் ராதாபுரம் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதால், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் தேதி தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக கூறி நெல்லை, குமரி மீனவர்கள் இடையே நடு கடலில் மோதல் ஏற்பட்டது. மோதலை தொடர்ந்து டிலைட் என்ற மீனவர் மாயமாகியுள்ளார். இது தொடர்பாக 5 மீனவர்கள் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். டிலைட் இதுவரை கிடைக்காததால், போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்