10 % இடஒதுக்கீடு : அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இன்று முடிவு

தமிழ்நாட்டில் முற்பட்ட வகுப்பினருக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக விவாதிக்க, அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கூட்டம், இன்று நடைபெற உள்ளது.
10 % இடஒதுக்கீடு : அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இன்று முடிவு
x
முற்பட்ட வகுப்பினரில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை எம்.பி.பி.எஸ்., படிப்பு சேர்க்கையில் அமல்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும், இந்திய மருத்துவக் கவுன்சில் அறிக்கை அனுப்பியுள்ளது. 10 சதவீத இட ஒதுக்கீட்டால் 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறை பாதிக்கும் என தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று மாலை, 5:30 மணிக்கு, தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. இதில், தி.மு.க., காங்கிரஸ்., பா.ஜ.க, மற்றும் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்