பசுமையை மீட்டெடுக்க 500 இளைஞர்களுடன் பசுமை வேட்டவலம் என்ற அமைப்பு துவக்கம்...

திருவண்ணாமலையில் உள்ள வேட்டவலம் பகுதியில் பசுமையை மீண்டும் செழிக்க செய்ய 500 இளைஞர்களுடன் பசுமை வேட்டவலம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
x
திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் என்ற பகுதி, அதிகளவு மரங்கள் கொண்டிருந்த பகுதியாக இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் மனிதர்களின் அலட்சியத்தாலும், குடியிருப்புகளின் பெருக்கத்தாலும் மரங்கள் வெட்டப்பட்டு பசுமை இழந்த பகுதியாக மாறி வருகிறது. மேலும், தமிழகம் முழுவதும் மழையின் அளவு வெகுவாக குறைந்து தண்ணீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. எனவே இழந்த பசுமையை மீட்டெடுப்பதற்காகவும், தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி, வருங்கால சந்ததியினருக்கு தேவையான குடிநீர் கிடைக்கும் வகையில் மழை பெய்ய செய்யவும், மரங்களை வளர்த்து, பாதுகாக்கும் நோக்கத்தோடு பசுமை வேட்டவலம் என்ற அமைப்பு துவக்கப்பட்டது. இந்த அமைப்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். வேட்டவலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு, அவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், உத்வேகமாக இந்த குழு தற்போது செயல்பட தொடங்கியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்