ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வார காலத்திற்கு நீட்டிப்பு

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடை மேலும் 4 வார காலத்திற்கு தொடர்கிறது.
x
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி  ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை மாறுபட்ட கோணத்தில் செல்வதாக கூறி அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை  அப்பலோ நிர்வாகம் முன்வைத்தது. அதற்கு அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கபட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு  ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்தது.

ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது அப்போலோ நிர்வாகம் தெரிவித்த புகார்கள் குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில்  பதில் மனு தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம் கோரப்பட்டது. இதனை உச்சநீதிமன்றம்  ஏற்று கொண்டதால்  ஆறுமுசாமி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத்தடை மேலும் 4 வாரத்துக்கு தொடர்கிறது.

Next Story

மேலும் செய்திகள்