தூத்துக்குடி சம்பவத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி சம்பவத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
x
சி.பி.ஐ. இயக்குநர் சார்பாக சிறப்பு குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ரவி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டித்து ஜூன் 30 ஆம் தேதி வரை வழங்கி உத்தரவிட கோரினார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுவரை இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை செய்ய உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணை முடிப்பதற்கு கால அவகாசம் நிர்ணயம் செய்யமுடியாது என்பதால் சி.பி.ஐ. தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை செப்டம்பர் 15 ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்