காட்டுமன்னார்கோவில் : தண்ணீரின்றி தவிக்கும் அரசுப்பள்ளி - குளத்திற்கு செல்வதால் உயிர்பலி ஏற்படும் அபாயம்

சிதம்பரம் அருகே குடிநீரின்றி அவதிப்படும் அரசுப்பள்ளி மாணவர்கள், தண்ணீர் எடுப்பதற்காக குளத்திற்கு செல்வதால், உயிர்பலி ஏற்படும் அபாயம் நிலவி வருகிற
காட்டுமன்னார்கோவில் : தண்ணீரின்றி தவிக்கும் அரசுப்பள்ளி - குளத்திற்கு செல்வதால் உயிர்பலி ஏற்படும் அபாயம்
x
காட்டுமன்னார்கோவில் அடுத்த தொரப்பு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. மதிய உணவின் போது, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று இரண்டு குடங்களில் தண்ணீர் எடுத்து வந்த பிறகுதான், மாணவர்கள் சாப்பிட முடியும் என்ற நிலை இ​ங்கு உள்ளது.  மாணவர்கள் தங்களது கைகள் மற்றும் பாத்திரங்களை சுத்தம் செய்ய அருகில் உள்ள குளத்தில் தண்ணீர் எடுக்க வேண்டி உள்ளதால், உயிர்ப் பலி ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர்த் தொட்டியை சீரமைக்க வேண்டும் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்