ரூ.2.50 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை திருட்டு - வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை
திருப்பூர் மாவட்டம் அருள்புரம் பகுதியில் உள்ள நாராயணி பீடத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம் அருள்புரம் பகுதியில் உள்ள நாராயணி பீடத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் பக்தர் ஒருவர் நன்கொடையாக கோயிலுக்கு வழங்கிய இருந்த நாராயணி அம்மன் சிலையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஐம்பொன்னால் ஆன அந்த சிலையின் மதிப்பு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவில் பூசாரி அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story