ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது வியாபாரிகள் தாக்கியதில் போலீசாரின் மண்டை உடைந்ததால் பரபரப்பு
பதிவு : ஜூன் 19, 2019, 12:48 AM
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது வியாபாரிகள் தாக்கியதில் போலீசார் ஒருவருக்கு மண்டை உடைந்தது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது வியாபாரிகள் தாக்கியதில் போலீசார் ஒருவருக்கு மண்டை உடைந்தது. புதிய பேருந்து நிலையம் அருகே ஆக்கிரமிப்பு செய்த கடையை நகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். அப்போது வியாபாரி ஒருவர் தராசு எடைக்கல்லால் தாக்கியதில், மணிகண்டன் என்ற போலீசாரின் மண்டை உடைந்தது. இதனையடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டு ஆக்கிரமிப்பை அகற்றும் பணி தொடர்ந்தது.போலீசார் தாக்கப்பட்டது தொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.