வாலாஜா ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது : குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை

சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை போக்க வீராணம் ஏரியை தொடர்ந்து வாலாஜா ஏரியில் இருந்தும் நீர் கொண்டுவரப்படுகிறது.
வாலாஜா ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது : குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை
x
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 75 கனஅடி நீர் கொண்டு செல்லலாம் என்ற நிலையில், தற்போது வினாடிக்கு 40 கனஅடி நீர் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் வீராணம் ஏரியை தொடர்ந்து வாலாஜா ஏரியில் இருந்தும் கூடுதல் தண்ணீர் எடுக்க திட்டமிடப்பட்டது. என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீர் வடலூர் அருகே வாலாஜா ஏரியில் தேக்கி வைக்கப்படுகிறது. சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 25 கன அடி நீர் கொண்டு செல்வதற்கு தற்போது திட்டமிடப்பட்டு உள்ளது. வீராணம் ஏரி குழாய்கள் வழியாகவே இந்த தண்ணீர் கொண்டு செல்லப்பட உள்ளது. வாலாஜா ஏரி முழுவதும் நிரப்பி வைக்கப்பட்டுள்ள நீர் விவசாயத் தேவைகளுக்காகவும் திறந்து விடப்பட்டு, சென்னை குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காகவும் கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்