வெளி நாடு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் மனு
பதிவு : ஜூன் 18, 2019, 01:57 AM
வெளிநாடு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தனது மகளுடன் சென்று மனு அளித்துள்ளார்.
வெளி நாடு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தனது மகளுடன் சென்று மனு அளித்துள்ளார்.திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த முருகேசன் என்பவர் ஆடு மாடு மேய்க்கும் வேலைக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு  சவுதி அரேபியாவிற்கு சென்றதாக தெரிகிறது. அங்கு சென்றது முதல், முருகேசன், எந்த வித தொடர்பும் இல்லை எனவும், இதுகுறித்து அவரை அனுப்பி வைத்தவரிடம் கேட்டபோது முறையான பதில் கிடைக்கவில்லை என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில்,திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மகளுடன் வந்த அவரது மனைவி மகேஸ்வரி, கணவரை மீட்டுத்தரக்கோரி மனு அளித்தார்.  இதற்கு முன்பு பலமுறை மனு அளித்துள்ளதாகவும், இதுவரை  எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை எனவும் தாயும் மகளும், வேதனையுடன் குற்றம்சாட்டி சென்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.