நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்சினை? - சென்னை உயர்நீதிமன்றம்

நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது என்பது குறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
ராஜிவ் காந்தி  கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, கடந்த 27 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
லண்டனில் வசிக்கும்  மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க தனக்கு  6  மாதங்கள் பரோல் வழங்க கோரி நளினி சென்னை உயர்நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்தார்.  ஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மாதம் பரோல் வழங்க சிறை விதிகள் உள்ள போதும்,  கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தான் வழங்கிய பரோல் விண்ணப்பத்தை வேலூர் சிறை நிர்வாகம் பரிசீலிக்கவில்லை என்றும் நளினி மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் என்றும் நளினி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு  இன்று  விசாரணைக்கு வந்த போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், நளினி , தனது மகள் திருமண ஏற்பாடு தொடர்பான கூடுதல் ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யவில்லை என்றும்  உயர்நீதிமன்றத்தில்  நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் பாதுகாப்பு சிக்கல்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் நளினியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்னை உள்ளது என்பது குறித்து  பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்