கலை -அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்புகளை 4 ஆண்டுகளாக மாற்றமா?
பதிவு : ஜூன் 10, 2019, 04:26 PM
கலை -அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்புகளை 4 ஆண்டுகளாக மாற்ற புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி கொள்கைக்கான  வரைவு அறிக்கை மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. அவை ஏற்கப்பட்டால் கலை - அறிவியல் கல்லூரிகளில் தற்போது 3 ஆண்டுகளாக உள்ள பி.ஏ. , பிஎஸ்சி உள்ளிட்ட  பட்டப்படிப்புகள் 4 ஆண்டுகளாக  மாற  வாய்ப்புள்ளது. அதை தேந்தெடுக்கும் உரிமை சம்பந்நப்பட்ட கல்லூரிகளுக்கு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  உயர்கல்வி முறையை சீர்படுத்த அனைத்து உயர்கல்வி  நிறுவனங்களையும் 3 வகையாக பிரிக்கவும்  நிகர்நிலை பல்கலைக்கழகம், இணைப்பு பல்கலைக்கழகம் போன்ற பெயர்கள் நீக்கவும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

தாராளவாத கலைப்பிரிவு  பட்டப்படிப்புகள்  அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இடம்பெறவும்,  பி.எல்.ஏ. எனும் தாராளவாத கலைப்பிரிவு மற்றும் பி.எல்.இ. எனும் தாராளவாத கல்வியல் பிரிவு 4 வருட பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை 3 வகையாக பிரிக்கவும், தேசிய உயர்கல்விக்கான தர நிர்ணய கட்டமைப்பை   உருவாக்க ஜி.இ.சி. எனும் பொது கல்வி நிறுவனம் அமைக்கவும் புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இளங்கலை பட்டப்படிப்புகளில் ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தவும், நாடு தழுவிய அளவில் ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்த தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

எம்பில் படிப்பு நிறுத்தப்படும் என்றும் ஆராய்ச்சியுடன் கூடிய 4 வருட பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு பி.எச்.டி செய்வதற்கான தகுதியாக ஏற்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜி.இ.சி. மூலம் மிகப்பெரிய திறந்த வெளி இணைய கல்வி படிப்புகளில் ஈட்டப்படும் கிரெடிட் புள்ளிகளை அங்கீகரிக்க ஒரு அமைப்பை உருவாக்கவும்,  2023 -ஆம் ஆண்டிற்குள்  நாட்டில் ஒரே ஒரு ஆசிரியர் பயிற்சி திட்டம் மட்டும் இருக்க வேண்டும் என்றும்  புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  

பிற செய்திகள்

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1200 ஆக உயர்வு

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 49 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது.

0 views

தமிழகத்தில் மத்திய சுகாதார குழுவினர் 3 நாள் ஆய்வு - கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை

மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான மத்திய குழுவினர் தனது ஆய்வு பணியை சென்னையில் இன்று தொடங்கினர்.

9 views

4 மாத வாடகையை கேட்ட உரிமையாளர் குத்திக் கொலை - இளைஞரை கைது செய்த போலீஸ்

சென்னை குன்றத்தூரில் வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

17 views

டி.எஸ்.பி. உள்பட 8 காவலர்களை சுட்டுக் கொன்ற உத்தரப்பிரதேச பிரபல ரவுடி விகாஷ் தூபே கைது

டி.எஸ்.பி. உள்பட 8 காவலர்களை சுட்டுக் கொன்ற உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிரபல ரவுடி விகாஷ் தூபே மத்தியப் பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.

9 views

அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வி சாத்தியமாகுமா?

அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வி திட்டத்தை அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், நடைமுறையில் சாத்தியமாகுமா? என விளக்குகிறது இந்த தொகுப்பு....

68 views

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மேலும் 18 பேர் பலி

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனோ தொற்றுக்கு 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.