"மழைநீர் சேகரிப்பு அமைப்பு அவசியம்" - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்
பதிவு : ஜூன் 08, 2019, 07:57 AM
மாற்றம் : ஜூன் 08, 2019, 08:14 AM
இயற்கையையும், எதிர்கால சந்ததியையும் பாதுகாக்க மழைநீர் சேகரிப்புக்கு முன்னுரிமை அளித்து செயல்பட அனைத்து தரப்பினருக்கும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்வது குறித்து, தமிழ்நாடு குடிநீர் வாரிய  செயற் பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள்,  பஞ்சாயத்து மற்றும் நகரப் பஞ்சாயத்து உதவி இயக்குநர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.போதிய மழை பெய்யாததும், தமிழகத்தில் வட மாநிலங்களில் உள்ளது போன்ற வற்றாத ஜீவ நதிகள் இல்லாததும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இதுதவிர, தமிழகத்தில் கடந்த 2016 முதல் இதுவரை 2017 ஆம் ஆண்டை தவிர மற்ற ஆண்டுகளில் வழக்கத்தை விட மழை குறைவாகவே பெய்துள்ளது.மேலும், கடந்த 50 ஆண்டுகளில் பெரும்பாலான மாவட்டங்களில் மழையளவு வழக்கமான அளவை விட குறைவாக பெய்துள்ளதாகவும், நிலத்தடி நீர்மட்டமும் 16 மாவட்டங்களில் 15 மீட்டருக்கும் கீழாக சென்றுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இயற்கையையும், எதிர்கால சந்ததியையும் பாதுகாக்க மழைநீர் சேகரிப்புக்கு முன்னுரிமை அளித்து அனைத்து தரப்பினரும் செயல்பட வேண்டும் என்றும்,பிளாக் வாரியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வரைபடம் வெளியிட உள்ளதாகவும், இதன் மூலம் ஆழ்குழாய் கிணறு அமைப்பது மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்குவது போன்றவற்றை திட்டமிட மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த வரைபடம் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாவட்ட ஊரக மேம்பாட்டு  ஆணையம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர்  அலுவலகங்களில் கிடைக்கும் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.