சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு

சிறுவாணி அணை நீர் மட்டம் சரிந்து வருவதால் சென்னையை போன்று கோவையிலும் தண்ணீர் தட்டுப்பாட்டு அபாயம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு
x
கோவையில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையில் 878 புள்ளி 50 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேக்க முடியும்.போதிய மழை இல்லாததால், அணையின் நீர் இருப்பு குறைந்து வருகிறது.இதனால், ஜூன் மாதம் வரை விநியோகிக்கும் அளவுக்கே நீர் இருப்பு உள்ளது.சிறுவாணி அணையில் இருந்து, சாடிவயல் நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு நீர் எடுக்கப்பட்டு, கோவையைச் சுற்றிய 22 கிராமங்கள், மாநகராட்சியின் 23 வார்டுகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.நீர்மட்டத்தை பொறுத்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு எடுக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டு வருகிறது.பருவமழை மழை பெய்தால் மட்டுமே அணையில் இருந்து நீர் எடுக்க முடியும் என மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கின்றது.தற்போது தொடங்க உள்ள தென்மேற்கு பருவமழை கை கொடுத்தால், மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்கும்.இல்லை எனில், சென்னை போன்றே,கோவையிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.மழை நீரை சேமிக்க வேண்டியது அவசியம் என்று குடிநீர் வடிகால் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்