"5 ஆண்டுக்குள் ராமர் கோயிலை கட்டாவிட்டால் வழக்கு தொடர்வோம்" - சீமான்

பாஜக ஆட்சியில் பசுவை தவிர எந்த உயிர்களை வதைத்தாலும் குற்றமில்லை என்ற நிலை உள்ளதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
5 ஆண்டுக்குள் ராமர் கோயிலை கட்டாவிட்டால் வழக்கு தொடர்வோம் - சீமான்
x
நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ராமர் கோயில் கட்டுவதாக பாஜகவினர் பொய் பேசி வருவதாகவும், இந்த முறை அவர்கள் ராமர் கோயிலை கட்டாவிட்டால், வழக்கு தொடர இருப்பதாகவும் குறிப்பிட்டார்.தமிழர்களை பாரம்பரிய வழிபாட்டில் இருந்து வெளியேற்றி, அண்ணா, ஜெயலலிதா, கருணாநிதி சமாதிக்கு கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள் என சீமான் விமர்சித்தார். உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்றும், தங்களை கண்டு அச்சம் கொள்பவர்களை நமது வெற்றி மூலம் விரும்ப வையுங்கள்  என்றும் அவர் தெரிவித்தார்.                                                                                                               

Next Story

மேலும் செய்திகள்