மும்மொழிக் கொள்கையை ஏற்கக்கூடாது - வீரமணி

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்கக்கூடாது என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கையை  ஏற்கக்கூடாது - வீரமணி
x
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்கக்கூடாது என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.விடுதலை நாளேட்டின் எண்பத்து ஐந்தாவது ஆண்டு விழா சென்னை எழும்பூரில் உள்ள திராவிடர் கழகத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதழியல் குறித்த கவியரங்கங்கள், கருத்தரங்குகள் நடைபெற்றன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி, உலகத்திலேயே பகுத்தறிவு நாளேடு 85 ஆண்டுகாலமாக வெளிவந்து கொண்டிருப்பது விடுதலை தான் என குறிப்பிட்டார். இருமொழிக்கொள்கை தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அவர்,  மும்மொழிக் கொள்கையை அரசு ஏற்க கூடாதுஎன்றார்.மும்மொழிக்கொள்கையை அமல்படுத்தினால் தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் எனவும் வீரமணி எச்சரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்