மோடி பதவியேற்பு விழா : ஒருநாள் முன்பாகவே டெல்லி புறப்பட்டு சென்ற ரஜினி
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் டெல்லி புறப்பட்டு சென்றார்.
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் டெல்லி புறப்பட்டு சென்றார். தொடர்ந்து 2வது முறையாக பிரதமராக நாளை மோடி பதவியேற்கிறார். இந்த விழாவில் உலகத் தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் நடிகர் ரஜினி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த விழாவில் பங்கேற்க ஒருநாள் முன்பாகவே ரஜினி சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். மக்களை வசீகரிக்கக் கூடிய தனிப்பெரும் தலைவர் என்று மோடியை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story