காவிரி மேலாண்மை ஆணையம் உயிரற்று இருக்கிறது - விவசாயிகள் அதிருப்தி

காவிரி மேலாண்மை ஆணையம் உயிரற்று இருப்பதாக தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
x
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசால் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் நிலைப்பாட்டிற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, காவிரி மேலாண்மை ஆணையம் உயிரற்று இருப்பதாக தஞ்சாவூர் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். முறையாக காவிரி நீர் திறக்கப்படாததால், டெல்டா பகுதி வறண்டு கிடப்பதாக வேதனை தெரிவித்த அவர்கள், நாளை நடைபெற உள்ள கூட்டத்தில், தமிழகத்திற்கு தேவையான நீரை மாநில அரசு கேட்டு பெற வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என தஞ்சாவூர் விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்