"திராவிடத்தை வீழ்த்த முடியாது" - மு.க ஸ்டாலின்

திராவிட இயக்கத்தை எவராலும் ஒரு போதும் வீழ்த்த முடியாது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிடத்தை வீழ்த்த முடியாது - மு.க ஸ்டாலின்
x
திராவிட இயக்கத்தை எவராலும் ஒரு போதும் வீழ்த்த முடியாது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வாக்காளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி அறிக்கை வெளியிட்ட அவர், நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் தி.மு.க பெற்றிருப்பதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். தி.மு.க.வை அழிக்க நினைத்த சக்திகளுக்கு ஜனநாயக ரீதியாக கொடுக்கப்பட்ட தக்க பதிலடி தான் இந்த தேர்தல் முடிவுகள் எனவும், மாநில உரிமை பறிபோகாமல், ஜனநாயகத்தை மீட்டெடுத்து காக்க அமைதியான அறவழியில் போராட்டம் தொடரும் எனவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்