மாநிலங்களவை தேர்தல் : 6 இடங்கள் யாருக்கு?

தமிழகத்தை சேர்ந்த 6 பேரின் மாநிலங்களவை பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடையும் நிலையில் அதிமுக -திமுகவுக்கு தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
மாநிலங்களவை தேர்தல் : 6 இடங்கள் யாருக்கு?
x
தமிழகத்தை சேர்ந்த 6 பேரின் மாநிலங்களவை பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடையும் நிலையில் அதிமுக -திமுகவுக்கு  தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. 250 எம்.பி.க்களை கொண்ட மாநிலங்களவையில் தமிழகத்தை சேர்ந்த 18 உறுப்பினர்கள் உள்ளனர்.  தற்போது மாநிலங்களவையில் அதிமுகவை சேர்ந்த 12 பேரும் திமுகவை சேர்ந்த  4 பேரும் எம்.பி.க்களாக உள்ளனர். இதேபோல் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த இருவர் உறுப்பினர்களாக உள்ளனர்.  

இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த  அர்ஜுனன், மைத்ரேயன், ரத்தினவேல், லக்ஷ்மணன் திமுக உறுப்பினர்கள் கனிமொழி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி ராஜா ஆகிய 6 பேரின் பதவி காலம் வரும் ஜூலை மாதம் நிறைவடைகிறது. காலியிடங்களுக்கான புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. அதன்படி அதிமுகவால் அக்கட்சிக்கு  3 மாநிலங்களவை உறுப்பினர்களை எளிதாக தேர்தெந்தெடுக்க முடியும்.

இந்த முறை அதிமுக மற்றும் திமுவுக்கு தலா 3 மாநிலங்கள உறுப்பினர்களை எளிதாக தேர்வு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி அதிமுக 1 மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை பாமகவுக்கும், திமுக  1 மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை மதிமுகவுக்கும் அளிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. அதன்படி இரு கட்சிகளும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

அதிமுகவிற்கு புதுச்சேரியிலிருந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினர் உள்ளார். தமிழகத்திலிருந்து புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்களின் பலம் 11`ஆகவும் திமுகவின் பலம் 6 ஆகவும் அதிகரிக்கும். பாஜகவுக்கு மாநிலங்களவையில் தற்போது 73 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அதிமுக,  சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கு தேவைப்படும்.

Next Story

மேலும் செய்திகள்