இன பெருக்கத்துக்காக வருகை தரும் ஆஸ்திரேலியா பறவைகள்

விருதுநகர் மாவட்டத்துக்கு, ஆண்டுதோறும் வரும் ஆஸ்திரேலிய பறவைகளின் எண்ணிக்கை, தண்ணீர் பற்றாக்குறையால் குறைந்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இன பெருக்கத்துக்காக வருகை தரும் ஆஸ்திரேலியா பறவைகள்
x
சாத்தூா் அருகே உள்ள சங்கரபாண்டியாபுரம் கிராமத்திற்கு ஆண்டுதோறும் வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வருவதால், தமிழக வனத்துறையினா் இந்த கிராமத்தை பறவைகள் உய்விடமாக அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து இனப்பெருக்கத்துக்காக வரும் பறவைகள், சுமார் ஆறு மாதம் வரை தங்கி இருக்கும் என்றும், இந்த காலத்தில் கிராமத்தினா் பட்டாசு வெடிப்பதில்லை என்றும் கூறுகின்றனர். இந்நிலையில் தற்போது அப்பகுதியில் உள்ள நீா் நிலைகள் வறண்டுள்ளதால் வெளிநாட்டு பறவைகளுக்காக அப்பகுதி மக்கள் வீடுகளில் தண்ணீா் தொட்டி மூலம் தண்ணீா் வைத்து உள்ளனா். தண்ணீர் பற்றாக்குறையால் பறவைகளின் வருகை குறைந்துள்ளதால், வனத்துறையினர் தண்ணீர் வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்