திமுக, அதிமுக வெற்றி வாய்ப்பு தொகுதிகள்
நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என தந்தி டி.வி.யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவில் தெரிய வந்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடந்த 39 மக்களவை தொகுதிகளில் தந்தி டி.வி. பிரமாண்ட கருத்துக்கணிப்பை நடத்தியது. இதன் முடிவுகள் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன. அதில் திமுக கூட்டணி, மத்திய சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, கரூர், ஈரோடு, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதேபோல், அதிமுக கூட்டணி திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சேலம், பொள்ளாச்சி, தேனி மற்றும் திருப்பூர் ஆகிய தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கன்னியாகுமரி, அரக்கோணம், விழுப்புரம், ஆரணி, சிதம்பரம், கோவை, ராமநாதபுரம், தர்மபுரி, மதுரை, நாமக்கல், திருவண்ணாமலை, தென்சென்னை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் கடும் போட்டி உள்ளதால் இழுபறி தொகுகள் என தந்தி டி.வியின் கருத்துக்கணிப்பு முடிவின் மூலம் தெரிய வந்துள்ளது.
Next Story