"தேனியில் நியாயமான முறையில் நடத்த வேண்டும்" - தேர்தல் ஆணையத்திடம் தமிழக காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை

கோவை மாவட்டம், திருவள்ளூரில் இருந்து தேனிக்கு கொண்டு வரப்பட்ட 70 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை நீக்க வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
தேனியில் நியாயமான முறையில் நடத்த வேண்டும் - தேர்தல் ஆணையத்திடம் தமிழக காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை
x
கோவை மாவட்டம், திருவள்ளூரில் இருந்து தேனிக்கு கொண்டு வரப்பட்ட 70 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை நீக்க வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. 

இது குறித்து அளிக்கப்பட்ட புகார் மனுவில், தேனி மாவட்டத்தில் மே 19 நடைபெறவுள்ள மறு வாக்குபதிவு இயந்திரங்கள் அதிமுக வேட்பாளருக்கு சாதகமாக திருத்தப்பட்டிருக்கலாம் என, கருதுவதாக கூறப்பட்டுள்ளது. எனவே, ஓப்புகை சீட்டு இயந்திரத்தில் பதிவாகும் துண்டு சீட்டுகளை எண்ண வேண்டும் என கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் ஆளும்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் செயல்படுவதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அதிமுக வேட்பாளரின் சட்ட விரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்தி நியாயமான முறையில் தேனியில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்