திருமண நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்த போது விபரீதம் : ரேசன் கடையில் தீ விபத்து

பூந்தமல்லி அருகே லட்சுமிபுரம்,ருக்குமணி நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற திருமண நிகழ்ச்சி போது பட்டாசு வெடித்துள்ளனர்
திருமண நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்த போது விபரீதம் : ரேசன் கடையில் தீ விபத்து
x
பூந்தமல்லி அருகே லட்சுமிபுரம், ருக்குமணி நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற திருமண நிகழ்ச்சி போது பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது பட்டாசின் தீப்பொறிகள் அருகிலிருந்த ரேசன் கடை மீது விழுந்ததில், கடையின் முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஓலைக்குடிசை தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அனைத்து பெரும் சேதத்தை தவிர்த்தனர். இந்த தீ விபத்து குறித்து பூந்தமல்லி போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்