ஒட்டப்பிடாரத்துக்கு 3 கம்பெனி துணை ராணுவப்படை வந்துள்ளது - அசுதோஷ் சுக்லா

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா தலைமையில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
x
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா தலைமையில் ஓட்டப்பிடாரம் தனியார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இதில், தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், நெல்லை சரக  டி.ஐ.ஜி, மாவட்ட எஸ்.பி., உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க, ஒவ்வொரு பகுதிகளிலும் கூடுதலாக போலீசாரை ஈடுபடுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்