பாமக தலைமையில் இடைத்தேர்தல் ஆய்வு கூட்டம் : அரவக்குறிச்சி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும், பாமகவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
பாமக தலைமையில் இடைத்தேர்தல் ஆய்வு கூட்டம் : அரவக்குறிச்சி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை
x
கரூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில துணை பொது செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். இதில், பாமக மாநில தலைவர் கோ.க.மணி,போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாநில அதிமுக சிறுபான்மை பிரிவு தலைவர் அன்வர்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. 

குடிநீர் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் - அமைச்சர் கே.சி.கருப்பணன் உறுதி



அரவக்குறிச்சி தொகுதியில் நீண்ட காலமாக உள்ள குடிநீர் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பரமத்தி ஊராட்சிக்கு உட்பட்ட தென்னிலை பேருந்து நிலையம் அருகே அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், குடிநீர் திட்டத்திற்காக, 700 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்