வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் - தேர்தல் ஆணையம் ஒப்புதல்

மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் - தேர்தல் ஆணையம் ஒப்புதல்
x
மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி ஒருவர், அத்துமீறி நுழைந்தது குறித்து உயர் மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, உதவி தேர்தல் அதிகாரி  அறிவுறுத்தலின் பேரில் தாசில்தார், வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு சென்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய பரிந்துரையை ஆய்வு செய்து முடிவெடுக்க 2 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அப்போது நீதிபதிகள், தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய அறிக்கையில் ஆட்சியரின் உதவியாளர் மீது, என்ன நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது? என கேள்வி எழுப்பினர். மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நீதிபதிகள் வினவியுள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்த அறைக்கு சென்றாரா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்